ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விட்ட நடிகர்
தமிழ் சினிமாவில் வேகமாக முன்னனி இடத்தை பிடித்துவருபவர் நடிகரும் இயக்குனருமான ரவிமரியா. வில்லன் வேடங்களில் நடித்துவந்த இவர் தற்போது காமெடியிலும் கலக்கி வருகிறார். தற்போது அவர் பகிரி படத்தில் நடித்துவருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பகிரி படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் ஏற்கெனவே இரண்டு படங்களை தயாரித்தவர். ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனராக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். முக்கியமாக கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கினார். இதில் நான் எக்ஸ்பெக்டிங் கவுன்சிலராக நடித்திருக்கிறேன். அதாவது கவுன்சிலராவதற்காக காத்திருக்கும் கேரக்டர். எப்படியாவது அந்த வார்டு கவுன்சிலராகிவிட வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் அது இறுதிவரை நடக்காது. அதற்கான காரணத்தை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
அது தவிர ஹீரோயினின் அம்மாவை சைட் அடிக்கும் கேரக்டர். ஹீரோயின்னா சைட் அடிக்கலாம். ஹீரோயின் அம்மாவா? என்று தயக்கத்துடன் தான் ஸ்பாட் போனேன். ஆனால் ஹீரோயின் அம்மாவாக ஹீரோயினுக்கு சமமான அழகான ஆர்ட்டிஸ்டை தேர்வு செய்திருந்தார் இயக்குனர். ஸ்பாட்டிலும் ஹீரோயினுக்கும் ஹீரோயின் அம்மாவுக்கும் யார் அதிக அழகு என்ற போட்டி நடக்கும். அதனாலேயே நான் படப்பிடிப்பு முடிந்தவுடன் நமக்கெதுக்கு வம்பு என்று வீட்டுக்கு கிளம்பிவிடுவேன். இந்த படத்தில் நான் வரும் காட்சிகள் எல்லாமே சிரிக்க வைக்கும். ஒரு பார் காட்சி எடுக்கும்போதே எல்லோரும் கைதட்டினார்கள்.
இந்த படத்துக்கு பகிரி என்று டைட்டில் வைத்தார் இயக்குனர். எங்கு படப்பிடிப்பு போனாலும் அங்கு வரும் புதிய மனிதர்களிடம் பகிரிக்கு விளக்கம் கேட்போம். எல்லோருமே முழிப்பார்கள். நம் தமிழ் மொழியின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பகிரி என்பதற்கு வாட்ஸ் அப் என்று அர்த்தம் என்பது படம் வந்தபின்பு எல்லோருமே அறிந்துகொள்வார்கள். தமிழ் சினிமாவில் இதுபோன்ற தூய தமிழ் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
