இந்திய தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் பலி?

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
இந்திய தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் பலி?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 முதல் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் தரைவழியாகவும், ராணுவ ஹெலிகாப்டர் மூலமும் சென்று தாக்குதல் நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. நள்ளிரவு 12 மணிக்கு சென்ற வீரர்கள் தாக்குதலை முடித்து அதிகாலை 4.30 மணிக்கு இந்திய பகுதிக்குள் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதலை தொடர்ந்து முப்படைகளும் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். எல்லையை ஒட்டியுள்ள காஷ்மீர் மற்றும் பஞ்சாப் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கின்றனர். இது தொடர்பாக ராஜ்நாத் சிங் சம்பந்தப்பட்ட முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மூலக்கதை