இந்தியா உள்பட 4 நாடுகள் சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகல்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
இந்தியா உள்பட 4 நாடுகள் சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகல்

இந்தியா, வங்கதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடக்கவுள்ள எதிர்வரும் தெற்காசிய (சார்க்) உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகியுள்ளன.

இந்த பிராந்தியக் குழுவின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள நேபாளத்தின் அதிகாரிகள், தாங்கள் இன்னமும் இந்த கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று ‘ பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் தீவிரவாதம்’ ஆகிய இரண்டு அம்சங்களும் ஒன்றாக இருக்க முடியாது என்று தெரிவித்த இந்தியா, இந்த உச்சிமாநாட்டிலிருந்து முதல் நாடாக விலகியது.

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில், ஒரு ராணுவ முகாம் மீது நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ராஜிய ரீதியாக பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா எடுக்கும் முயற்சிகளின் அண்மைய ஆதாரங்கள் இவையென்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்ததாக இந்தியா கூறிய குற்றச்சாட்டினை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

மூலக்கதை