இந்தியா சமண துறவி சிதையை எரிக்க ரூ.11 கோடி ஏலம்
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் காலமான, சமணத் துறவியின் சிதையை தீயிட்டு எரிப்பதற்கான வாய்ப்பு, 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
புகழ் பெற்ற சமணத் துறவிகளின் சிதையை எரிப்பதற்கும், இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை பெறுவதற்கும், ஏலம் விடப்படுவது
வழக்கம். மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், சமீபத்தில், 97, வயதான சமணத் துறவி, பிரேம்சுர்ஜி சுவாஜி, காலமானார். அவரது சிதையை எரிப்பதற்கான வாய்ப்பை வழங்க, ஏலம் விடப்பட்டது. மூன்று மணி நேரம் நடந்த இந்த ஏலத்தின் இறுதியில், 11 கோடி ரூபாய்க்கு, கூட்டாக ஏலம் கேட்ட ஐந்து பேருக்கு, துறவியின் சிதையை எரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
துறவியின் பாடையை துாக்கிச் செல்லும் வாய்ப்பு, நான்கு பேருக்கு, தலா, 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இறுதிச் சடங்கின் போது பயன்படுத்தப்பட்ட, புனித நீர் நிரப்பப்பட்ட, நான்கு சிறு வெள்ளிக் குடங்களை வைத்துக் கொள்ளும் உரிமை, தலா, 21 லட்சம் ரூபாய்க்கு, நால்வருக்கு கிடைத்தது.
துறவியின் உடல், அமர்ந்த நிலையில் பாடையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஏலத்தில் வென்ற ஐந்து பேர், துறவியின் சிதைக்கு தீ மூட்டினர். ஏலத்தில் பெறப்படும் பணம், சமண மதம் சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
