’50 இலட்சம் கொடுத்தாலும் அதுக்கு முடியாது’

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
’50 இலட்சம் கொடுத்தாலும் அதுக்கு முடியாது’

காக்கா முட்டைக்கு பிறகு கவனிக்கத்தக்க நாயகியாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா. இருந்தாலும் பெரிய ஹீரோக்களின் பார்வை மட்டும் அவர் பக்கம் விழ மறுக்கிறது.

தனக்கு வரும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்துவருபவர் இனி ஹீரோயின் மட்டும் தான் என்று முடிவு எடுத்திருக்கிறார். இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின்னு முத்திரை குத்திடுவாங்களோ என்று பயந்து இந்த முடிவெடுத்திருக்கிறார்.

இப்படி ஒரு அதிரடி முடிவு எடுத்திருந்த நேரத்திலேயே ஒரு இயக்குநர் அணுகி ஐட்டம் டான்ஸுக்கு ஆட முடியுமா? என்று கேட்டுள்ளார். இந்தி ரூபாய் ஐம்பது இலட்சம் தருகிறேன் என்று ஆசை காண்பித்த இயக்குநரை, அடிக்காத குறையாக விரட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா.

மூலக்கதை