இயக்குனருடன் படுத்தால் தான் பட வாய்ப்பு: நடிகை ஓப்பன் டாக்!

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
இயக்குனருடன் படுத்தால் தான் பட வாய்ப்பு: நடிகை ஓப்பன் டாக்!

பொதுவாக சினிமாவில் பெண்கள் முன்னேறுவது கடினம் என்று சொல்வார்கள். பெண்களுக்கு பாதுகாப்பில்லை பல வழிகளில் பாலியல் தொந்தரவு வரும் என பேசுவதுண்டு, சில சமயங்களில் நடிகைகளை பற்றி அந்த மாதிரி கிசுகிசுக்கள் கூட வரும்.

இந்நிலையில் ஹிந்தி நடிகை டிஸ்கா சோப்ரா தன்னை இயக்குனர் ஒருவர் தன்னுடன் படுத்தால் பட வாய்ப்பு தருவதாக கூறினார் என நிகழ்ச்சி ஒன்றில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

42 வயதான நடிகை டிஸ்கா சோப்ரா, தாரே ஜமீன் பர், தில் தோ பச்சா ஹை ஜி, மை அவர் சார்லஸ் போன்ற ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு, பலருடன் சமரசம் செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது என்றார்.

எனக்கு படவாய்ப்புகள் கிடைக்காத போது, ஒரு பிரபல இயக்குனர் அழைத்தார். அவருடைய படத்தில் நடிப்பதற்கு, அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும் என வற்புறுத்தினார் என பகிரங்கமாக குற்றசாட்டை வைத்தார். இவர் பேசிய இந்த வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.

மூலக்கதை