எல்லைமீறிச் சென்ற இளவரசர் பகிரங்க மன்னிப்பு!

NEWSONEWS  NEWSONEWS
எல்லைமீறிச் சென்ற இளவரசர் பகிரங்க மன்னிப்பு!

டென்மார்க் இளவரசர் பிரடரிக் (Frederik Age-46) கடுமையான புயல் காற்று சுழன்றடித்துக் கொண்டிருந்த போது, ஸ்டோர்பெல்ட் (Storbelt)என்ற பாலத்தைக் கடந்து தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த பாலத்திலிருந்த தடுப்புக் கட்டையைத் தாண்டிச் செல்ல அவரது சொந்த பாதுகாப்புக்காக அவருக்கு அனுமதி தரப்பட்டது.

ஆனால் அவர் அனுமதி அளிக்கப்பட்ட பகுதியையும் தாண்டி காரை ஓட்டியுள்ளார்.

இந்நிலையில் இளவரசரின் நடத்தை பொறுப்பற்றதாய் உள்ளதாக பாலத்தின் இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் போலிசாரும் இளவரசரிடம் விளக்கம் கேட்டுள்ளதையடுத்து,அவர் தன் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட மற்ற வாகன ஓட்டிகள், டென்மார்க் அரச குடும்பம் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து ஊடகங்களிடம் புகார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை