ராஜபக்ஷவின் மகனுக்கு சொந்தமான தொலைக்காட்சியின் நிதிகள் முடக்கம்

BBC  BBC
ராஜபக்ஷவின் மகனுக்கு சொந்தமான தொலைக்காட்சியின் நிதிகள் முடக்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கூறப்படும் சி.எஸ்.என்.தொலைகாட்சி நிறுவனத்திற்கு சொந்தமான 163 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியை இலங்கை மத்திய வங்கியில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அதே போன்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜ்பக்ஷவிற்கு சொந்தமான இரண்டு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி பசில் ராஜ்பக்ஷவிற்கு சொந்தமான கடுவலை மற்றும் மாத்தறை பகுதிகளில் இருக்கின்ற இரண்டு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை விமானப்படிக்கு புதிதாக யுத்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் சம பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருனாத்திளக்க தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு கருதி ஜனாதிபதி மைத்ரிபால சிரிசெனாவின் திர்மான்னமோன்றுக்கு அமைய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலக்கதை