இலங்கை: வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடரப் பிரகடனம் வெளியீடு
இலங்கையில் உத்தேச அதிகாரப் பகிர்வில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும். என கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் ஓன்றியத்தினால் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரத்திற்குள் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் இந்த பிரகடனத்தை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனையில் ஒன்றுகூடி தங்களின் இந்தப் பிரகடனத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகங்களிடம் முன் வைக்க முடிவு செய்துள்ளனர்.
ஒற்றையாட்சி முறையிலான அதிகாரப் பகிர்வு, தற்போதுள்ள ஜனாதிபதி முறை ஆகியனவும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக அந்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
"வடக்கு - கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஒரு போதும் விரும்பவில்லை. அந்த இணைப்பு முஸ்லிம்களை சிறுபான்மை இனமாக்கும். இன ரீதியான அநீதிக்குள்ளாக்கும்.
முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு தேசிய இனம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளனர். மட்டுமன்றி சுய நிர்ணய உரித்துடையவர்களாகவும் இருப்பதால் அவர்களை ஒரு தேசிய இனமாக உறுதிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது'' என்று இந்த பிரகடனம் கூறுகின்றது.
''முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட உயிர், உடமைகளின் இழப்புக்களின் அடிப்படையில் ஒற்றையாட்சியே அவர்கள் விரும்புகின்றார்கள். சமஷ்டியை தங்களுக்கு பாதகமாகவே கருகின்றார்கள்" என அதிகாரப் பரவலாக்க முறை தொடர்பாக அந்த பிரகடனம் குறிப்பிடுகின்றது.
தற்போதைய ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என தனது பிரகடனத்தில் வலியுறுத்தியுள்ள கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம்
'' தமிழ் - முஸ்லிம் விவகாரங்களை கையாளக் கூடிய அதிகாரம் கொண்ட இரு துனை ஜனாதிபதிகள் இடம்பெறுவதை அரசியல் யாப்பு உறுதி செய்ய வேண்டும்" என்ற யோசனையையும் முன் வைத்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
