இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய விக்னேஸ்வரன் வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் ஆகிய மூன்று விடயங்களில் கூடிய கவனம் செலுத்திட வேண்டும் என்று இன்று (ஞாயிற்றுக் கிழமை) யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் பி.லக்ஷ்மன், ரீ.வசந்தராஜா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் பேசிய போது, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதால் மட்டுமே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையையும், தமிழ் மக்களின் மொழி, கலை, கலாசாரங்களைப் பேணி பாதுகாக்கவும் முடியும் என்று கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
