தமிழர்களால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது…அது தோல்வியே இல்லை: ராஜபக்சே

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
தமிழர்களால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது…அது தோல்வியே இல்லை: ராஜபக்சே

தமிழர்களின் வாக்குகளால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த அவர் முடிவுகள் முழுமையாக வெளிவருதற்குள் அதிபரின் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார்.

தலைநகரில் இருந்து அம்பா தோட்டா மாவட்டம் மெகமுல்லனாவில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்ற ராஜபக்சே அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.

வடக்கு, கிழக்கு, மற்றும் மலையக பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் எதிராக வாக்களித்ததே தமது தோல்விக்கு காரணம் என்று கூறினார்.

இருப்பினும் தமிழர்களின் வாக்குகளால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது என்று கூறிய அவர் அதனை ஒரு தோல்வியாக நான் கருதவில்லை.

சிங்களர்களை விட்டு அதிகாரம் இன்னும் செல்லவில்லை என்றும் தனது தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை