முதலமைச்சரை முத்தமிட்ட பெண்!- பெங்களூரில் பரபரப்பு (Video)

TAMIL CNN  TAMIL CNN
முதலமைச்சரை முத்தமிட்ட பெண்! பெங்களூரில் பரபரப்பு (Video)

பெங்களூருவில் நேற்று நடந்த விழா ஒன்றில், முதல்வர் சித்தராமையா கன்னத்தில் ஒரு பெண் திடீரென முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், கர்நாடக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிதாக 13 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் பதவியை இழந்த சீனிவாச பிரசாத், அம்பரீஷ் உள்பட அதிருப்தியாளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்கியே தீர வேண்டும் என அதிருப்தியாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளது சித்தராமையாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அரசியல் பரபரப்புக்கு இடையே, கர்நாடக குருபர சங்கம் சார்பில், அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும், மாவட்ட, தாலுக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழாவும் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உள்ள அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு குருபர சமுதாயத்தை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், மாவட்ட, தாலுக்கா பஞ்சாயத்துகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குருபர சமுதாயத்தை சேர்ந்த கவுன்சிலர்களை பாராட்டியும் பேசினார்.

மூலக்கதை