டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கியால் தாக்க முயற்சி : தேர்தல் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகஸ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்.
அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை பறித்து டிரம்ப் மீது சுட முயன்றுள்ளார்.
இச்சம்பவத்தில் சுதாரித்துக்கொண்ட பொலிசார் அதிரடியாக செயல்பட்டு அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர் . இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
குறிப்பிட்ட அந்த நபர் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து நெவாடா பகுதிக்கு டிரம்ப் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்குடன் வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Michael Sandford என்ற அந்த இளைஞன் முன்னதாக பொலிசாரை அணுகி தமக்கு டிரம்பின் ஆட்டோகிராப் வேண்டும் என போலியாக கேட்டுள்ளார். இந்த பேச்சினிடையே அவரது துப்பாக்கியை உருவியதாக கூறப்படுகிறது.
பிரித்தானியா ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் அந்த இளைஞர் கடந்த ஓராண்டாக டிரம்ப் மீதான தாக்குதலுக்கு முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக லாஸ் வேகஸ் பகுதியில் துப்பாக்கிசுடும் பயிற்சியிலும் அந்த நபர் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் தமக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை மாகாண நிர்வாகம் செய்து தரவில்லை என குற்றம்சாட்டினார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
