ஜேர்மனி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : அனைத்து விமானங்களிலும் தீவிர சோதனை
ஜேர்மனியில் உள்ள முனிச் நகரிலிருந்து ஏர் பெர்லின் என்ற விமானம் 170 பயணிகள் மற்றும் 7 விமான குழுவினருடன் நேற்று பிற்பகல் புறப்பட்டுள்ளது. ஹேம்பர்க் நகருக்கு அந்த விமானம் பறந்துக்கொண்டு இருந்தபோது, பொலிசாருக்கு ஒரு அதிர்ச்சி மின்னஞ்சல் வந்துள்ளது.
அதில் ” நடுவானில் பறந்துக்கொண்டு இருக்கும் ஏர் பெர்லின் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கும்” என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த தகவல் பறந்துகொண்டிருந்த விமானத்திற்கு தெரிவிக்கப்படவில்லை.
ஹேம்பர்க் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும் பொலிசார் விரைந்து செயல்பட்டனர். இந்த நேரத்தில் விமானங்கள் புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. வரக்கூடிய விமானங்கள் தரையிறங்கவும் தடை செய்யப்பட்டது.
வெடிகுண்டு உள்ளதாக கூறப்பட்ட விமானத்தை தனியாக கொண்டு சென்று தொலைவில் நிறுத்தியுள்ளனர். பின்னர், ஒவ்வொரு பயணியையும் வெளியேற்றி அவர்களின் பெட்டிகளையும் சோதனை செய்துள்ளனர்.
விமானத்தின் ஒவ்வொரு அங்குலமாக தேடிய பிறகு விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், விமானத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மின்னஞ்சல் அனுப்பியவர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
