பாராசூட்டில் பறந்த நபர் : உயர் மின்னழுத்த கம்பியில் மோதி பலி..

TAMIL CNN  TAMIL CNN
பாராசூட்டில் பறந்த நபர் : உயர் மின்னழுத்த கம்பியில் மோதி பலி..

பிரான்சில் பாராசூட்டில் பறந்து சாகசம் செய்த நபர் ஒருவர் உயர் மின்னழுத்த கம்பியில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Chambery பகுதியில் 38 வயதான இந்த பாராசூட் சாகசவீரர் பறந்து சாகசம் செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது பாராசூட் செயலிழந்துள்ளதாக தெரிகிறது.

இதில் நிலைத்தடுமாறிய அந்த நபர் காற்றின் வேகத்தில் பறந்து சென்றதில், அப்பகுதியில் உள்ள மின்கம்பியில் மோதியுள்ளார். 20,000 வோல்ட்ஸ் உயர் மின்னழுத்த கம்பி என்பதால் அந்த மனிதர் அடுத்த நொடியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.

சுமார் 30 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபரை இச்சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் மீட்டுள்ளனர். இதனையடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழு உள்ளிட்ட மீட்பு குழுவினர்,

விபத்துக்குள்ளான நபரை சோதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரிய வந்தது. உயர் மின்னழுத்த கம்பியில் மோதி தூக்கி வீசப்பட்டதாலும், மின்னழுத்தம் தந்த அதிர்ச்சியாலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை