குரங்கின் செய்கையால் மின்சாரமின்றித் தவித்த பொதுமக்கள்
கென்யாவில் உள்ள ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி மீது குரங்கு ஒன்று விழுந்ததில் மின்மாற்றி செயலிழந்தது. இதனால் 180 மெகாவாட் அளவிலான மின்சாரம் விநியோகிப்பது தடைபட்டது.
இது குறித்து ஜிடரு புனல் மின்சார நிறுவனத்தின் பொதுமேலாளர் கென்ஜென் கூறியதாவது:
வனவிலங்குகள் வரமால் பாதுகாப்புக்காக மின்நிலையங்களை சுற்றி மின்வேலிகள் அமைப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்களுடைய எல்லா மின் நிறுவனங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி மீது குரங்கு விழுந்ததில் மின்மாற்றி செயலிழந்தது. 4 மணி நேரத்தில் மின்மாற்றி சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது. நேற்று ஏற்பட்ட மின்சார துண்டிப்பின் காரணமாக கென்யாவில் தொழில் துறை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணமாக குரங்கு அதிர்ஷ்டவசமாக பிழைத்துகொண்டது. வைல்ட் லைஃப் சேவை மையத்தில் அந்தக் குரங்கு ஒப்படைக்கப்பட்டது.
ஜிடரு புனல் மின்சார நிலையம் கிழக்கு ஆப்ரிக்காவில் பெரிய நீர்மின்சார நிலையம் ஆகும். இது அந்நாட்டின் மிக முக்கிய ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
