ரஜினியுடன் 2.ஓ-வில் நடிக்காதது ஏன்.? – கமல்
எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரஜினி – ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 2.ஓ. எந்திரன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் அக்ஷ்ய், எமிஜாக்சன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வருகிறது. இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் என்ற பெருமையோடு 2.ஓ உருவாகி வருகிறது.
முன்னதாக 2.ஓ படத்தில் பவர்புல் ரோலான வில்லன் வேடமான அக்ஷ்ய் குமார் ரோலில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் அவர் கேட்ட சம்பளம் ஒத்துவராததால் அடுத்தப்படியாக நடிகர் கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. ஏற்கனவே கமலும், ரஜினியும் ஆரம்பகாலங்களில் இணைந்து நடித்துள்ளதால் அதை கருத்தில் கொண்டு இவர்களை இணைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் கமல் மறுத்துவிட்டார்.
இதனிடையே 2.ஓ படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை நடிகர் கமல்ஹாசன் தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது… எனக்கும், ரஜினிக்கும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் காரணமாகவே நான் 2.ஓ படத்தில் நடிக்கவில்லை. வில்லன் வேடம் என்பதால் 2.ஓ படத்தில் நடிக்க மறுக்கவில்லை. ஏற்கனவே நாங்கள் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். நான் ஹீரோவாகவும், ரஜினி வில்லனாகவும், ரஜினி ஹீரோவாகவும், நான் கெஸ்ட்ரோலிலும் நடித்தவர்கள் தான் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
