பூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்…? சுந்தர் சி. ஓபன் டாக்…
திருமண வயதை கடந்த பின்னும் திருமணமாகாதவர்களை முத்தின கத்திரிக்கா என்று அழைப்பது வழக்கம். தற்போது இப்பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.
இது மலையாளத்தில் வெற்றிப் பெற்ற ‘வெள்ளி மூங்கா’ படத்தின் ரீ-மேக் ஆகும்.
சுந்தர் சி உதவியாளர் வேங்கட் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் பூனம் பஜ்வா, சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம்புலி, வைபவ், சிங்கப்பூர் தீபன், ரவிமரியா, யோகி பாபு உள்ளிட்ட காமெடி பட்டாளமே நடித்துள்ளது.
குஷ்பூவின் அவ்னி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் ஜீன் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சுந்தர் சி பேசியதாவது….
“என் உதவியாளருக்கு நான் நன்றிக்கடனாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அவராக வந்து என்னிடம் வாய்ப்பு கேட்கவில்லை. நான் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று சொன்னேன்.
படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் வந்துள்ளது. ஒரிஜினல் மலையாள படம் போன்று இல்லாமல் நிறைய மாற்றங்களை செய்துள்ளோம்.
நான் 40 வயது கேரக்டரில் நடிக்கிறேன். எனக்கும் ஹீரோயினுக்கும் நிறைய வயது வித்தியாச இருக்க வேண்டும் என்றாலும் அது அவ்வளவாக தெரியக் கூடாது.
அதே சமயம் படத்திற்கு ஏற்ற குடும்ப பாங்கான நாயகி வேண்டும். அப்படியே கொஞ்சம் கிளாமரும் வேண்டும்.
எனவே எல்லாம் சரியாக இருந்ததால், பூனம் பஜ்வாவை நாயகியாக தேர்ந்தெடுத்தோம்.” என்று பேசினார் சுந்தர் சி.
Follow @cinecoffeemag-
- Movie: முத்தின கத்திரிக்கா, வெள்ளி மூங்கா
-
- Artists: குஷ்பூ, சதீஷ், சிங்கப்பூர் தீபன், சிங்கம்புலி, சுந்தர்.சி, பூனம் பஜ்வா, யோகி பாபு, ரவிமரியா, விடிவி கணேஷ், வேங்கட் ராகவன், வைபவ்
- Tags: குஷ்பூ தயாரிப்பு, சதீஷ், சிங்கப்பூர் தீபன், சிங்கம்புலி, சுந்தர் சி பூனம் பாஜ்வா, திருமண வயது, பூனம் பஜ்வா வயது, முத்தின கத்திரிக்கா, யோகி பாபு, ரவிமரியா, விடிவி. கணேஷ், வெள்ளி மூங்கா ரீமேக், வைபவ்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
