பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..?
சென்னையைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் என்பவர் தனது பைக்கில் நண்பருடன் அடையாறு மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது முன் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் போட்டதால், இவரது பைக் கார் மீது எதிர்பாரா விதமாக மோதியுள்ளது.
எனவே, காரை ஓட்டி வந்த பெண்ணுக்கும் பிரவீன்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவ்வழியாக வந்த நடிகர் சூர்யா, காரை விட்டு இறங்கி என்ன பிரச்சினை என்று விசாரித்திருக்கிறார்.
அப்போது பிரவீன் குமாரை சூர்யா அறைந்ததால், அவர் கீழே விழுந்து விட்டார். இதை அங்கிருந்த பலரும் செல்போனில் படம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்பு கூட்டம் கூடவே சூர்யா அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
தாக்கப்பட்ட பிரவீன் குமார் முதலுதவி எடுத்துக் கொண்டு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு சம்பந்தமே இல்லாத சூர்யா என்னை பொது இடத்தில் தாக்கினார்.
இதனால் அவமானப்பட்டுள்ள நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு சூர்யாதான் காரணம்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சூர்யா கூறியுள்ளதாவது… அந்த பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை தட்டிக் கேட்டுவிட்டு, பெண்ணை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
அட.. நிஜமா அங்க என்னதான் நடந்தது…?
Follow @cinecoffeemag-
- Artists: சூர்யா, பிரவீன் குமார்
- Tags: கார் மீது பைக் மோதல், சூர்யா தாக்கு, சூர்யா வாலிபர், சென்னை அடையாறு, தற்கொலை முயற்சி, பெண் தகராறு, போலீஸ் புகார், வாலிபரை தாக்கிய சூர்யா




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
