என்னை படுக்கைக்கு அழைத்தனர் : பாலா பட நடிகை பரபரப்பு புகார்
படப்பிடிப்பில் தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக தமிழ் நடிகை ஒருவர் புகார் கூறியுள்ள விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவை சேர்ந்த தமிழ் நடிகை புவிஷா மனோகரன். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர். இவர் இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகாவிற்கு தங்கையாக நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தான் கன்னடத்தில் நடித்த ‘ஜில் ஜில்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது, அப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் உதய் பல்லார் ஆகியோர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறினார்.
இதுபற்றி அவர் கூறும்போது “என்னை ஜில்ஜில் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ததில் இருந்தே தயாரிப்பாளர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஒளிப்பதிவாலர் உதய்பல்லார் ஆகியார் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். என்னை ஹோட்டல் அறைக்கு வரச் சொல்லி வற்புறுத்தி எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தனர்.
இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது போலீசாரிடம் புகார் கொடுக்க உள்ளேன்” என்று புவிஷா கூறினார்.
அவர் புகார் அளித்த பின்பு, அவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
