மனிதன் தமிழ் வார்த்தையே கிடையாது – உதயநிதி படத்துக்கு அரசு வரிசலுகை மறுப்பு

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
மனிதன் தமிழ் வார்த்தையே கிடையாது – உதயநிதி படத்துக்கு அரசு வரிசலுகை மறுப்பு

உதயநிதி படம் என்றால் வரிச்சலுகை கிடையாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. வரிச்சலுகைக்கு பரிந்துரைக்கும் குழு அரசின் இந்த முடிவை செயல்படுத்துவதில் காட்டும் ஆராய்ச்சியையும், அர்ப்பணிப்பையும் தனி புத்தகமாகப் போடலாம்.

மனிதன் படத்துக்கு வரிச்சலுகை பரிந்துரைப்பு குழுவில் உள்ள ஐவரில் மூவர் வரிச்சலுகை கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனை காரணம்காட்டி அரசும் வரிச்சலுகை கிடையாது என்று மறுத்துள்ளது.

ஏன் வரிச்சலுகை கூடாது என்பதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் இருக்கிறதே… வெயிலுக்கு அத்தனையும் படித்து ஏன் பதற வேண்டும். சாம்பிளுக்கு ஒண்ணே ஒண்ணு.

மனிதன் என்பது தமிழ் சொல்லே அல்ல. அது சமஸ்கிருதம். மாந்தர் மாந்தன் என்பதே தமிழ் சொல் என கூறியுள்ளனர்.

இவங்க தமிழ் பாசத்தைப் பார்த்தா ரத்தக்கண்ணீர் வருதேய்யா.

மூலக்கதை