ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்த விஜயின்ப் தெறி

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்த விஜயின்ப் தெறி

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சென்ற வாரம் வெளியான இந்தப் படம், வியாபார ஒப்பந்தத்தில் உண்டான சிக்கல்கள் காரணமாக செங்கல்பட்டுப் பகுதிகளில் சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவில்லை. மற்றபடி உலகெங்கும் வெளியாகி வசூலில் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது. வெளிநாடுகளிலும் இதன் வசூல் சிறப்பாக உள்ளது.

இதனையடுத்து, படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் விஜய், அட்லி, தாணு, மகேந்திரன், நைனிகா, மீனா உள்ளிட்ட படக்குழுவினர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.

இந்நிலையில் படத்தின் வசூல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆறு நாள்களில் ரூ. 100 கோடி வசூல் கிடைத்துள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள தெறி படத்தின் விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படங்களில் ஆறு நாள்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையையும் தெறி படம் பெற்றுள்ளது.

மூலக்கதை