கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு மரணம்: விபத்து என வழக்கை முடித்த நீதிமன்றம்

COOL SWISS  COOL SWISS
கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு மரணம்: விபத்து என வழக்கை முடித்த நீதிமன்றம்

சுவிட்சர்லாந்தின் லாசன்னே பாடசாலை மாணவர் குழு ஒன்று கடந்த 2014 ஆம் ஆண்டு ரோம் நகருக்கு துறை ரீதியான பயணமொன்றை மேற்கொண்டது.

இந்த பயணத்தினிடையே மாணவர் ஜோனத்தான் கத்தியால் தாக்கப்பட்ட காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டார்.

மாணவனின் மார்பில் 5 சென்றி மீற்றர் ஆழத்தில் கத்தி பாய்ந்துள்ளதற்கான அடையாளங்கள் உடற்கூறு பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக 4 மாணவர்களை திட்டமிட்டு கொலை செய்தல், உதவியை மறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்திருந்தது.

ஆனால் தொடர்ந்துள்ள விசாரணையின்போது அந்த மாணவர்கள் முரணான தகவல்களை பொலிசாரிடம் தெரிவித்ததால் விசாரணை அதிகாரிகள் திணறினர்.

மேலும் மாணவன் ஜோனத்தான் போதை மருந்துகள் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் முதலில் கூறப்பட்டது,

ஆனால் கத்தியால் ஒருவருக்கு ஒருவர் தாக்கி விளையாடியதில்தான் மாணவன் ஜோனத்தான் மார்பில் காயம்பட்டு இறந்திருக்கலாம் எனற கருத்து தற்போது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் Vaudois சிறார் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக ஜோனத்தான் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இத்தாலிய அதிகாரிகள் அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் மாணவன் ஜோனத்தான் தனக்கு தானே தண்டனை வழங்கியிருக்கலாம் என முடிவுக்கு வந்துள்ளது.

இதனை அடுத்து சுவிஸ் நீதிமன்றமும் குறிப்பிட்ட இந்த வழக்கினை திட்டமிட்ட கொலை அல்ல, வெறும் விபத்து என்றே முடிக்க முடிவு செய்துள்ளது.

மூலக்கதை