இரட்டைகோபுர தாக்குதலை விட மோசமானதாக இருக்கும்: அமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் வடகொரியா
எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.
மேலும் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானால் போர் ஏற்படலாம் என உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.
இதற்கிடையே தென் கொரியாவுக்கு ஆதரவாகவும் தமக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா எச்சரித்திருந்து.
தற்போது அமெரிக்காவுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் அரசாங்க ஊடகமான DPRK வெளியிட்டுள்ள செய்தியில், 15 வருடங்களுக்கு முன்னர் 3 பேர் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரம் பேர் பலியாகினர்.
இது அமெரிக்காவுக்கு மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது. ஆனால் மேற்கொள்ளும் இறுதி யுத்தத்தின் வெளிப்பாடாக வரலாற்றில் இருந்தே அமெரிக்கா துடைத்தெடுக்கப்படும்.
இந்த தாக்குதல் தொடர்பாக கவலைப்படுவதற்கு கூட அவர்களுக்கு நேரம் இல்லாமல் செய்துவிடுவோம்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் பெண்டகனை வடகொரியாவின் ஏவுகணை மற்றும் ஆயுதங்கள் தரை வழியாகவும், வான்வழியாகவும், கடல் வழியாகவும் குறி வைத்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.
வடகொரியாவில் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவுக்கு வட கொரியா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
