சுவிஸில் பச்சிளம் குழந்தையை பையில் வைத்து வீசிய தாய் கண்டுபிடிப்பு

COOL SWISS  COOL SWISS
சுவிஸில் பச்சிளம் குழந்தையை பையில் வைத்து வீசிய தாய் கண்டுபிடிப்பு

சுவிஸின் லூசெர்ன் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு பெண் குழந்தை அனாதையாக மீட்கப்பட்டது.

பிறந்து சில மணி நேரங்களே ஆன அந்த குழந்தை ஒரு பையில் வைக்கப்பட்டு மருத்துவமனை வாசலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

குழந்தையை மீட்டு பரிசோதனை செய்தபோது, அது மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருந்துள்ளது.

பொலிசாருக்கு இதுகுறித்து புகார் தெரிவித்ததும், அந்த பச்சிளம் குழந்தையை பற்றி பொலிசார் அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில், இதே லூசெர்ன் நகரை சேர்ந்த பெண் ஒருவர் பொலிசாரை தொடர்புக்கொண்டுள்ளார்.

அப்போது ‘மருத்துவமனையில் விட்டுச் சென்றது என்னுடைய குழந்தை தான் என்றும், அதற்காக மன்னிப்பு கோருவதாக’ தெரிவித்துள்ளார்.

ஆனால், சில பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பெண் யார்? எதற்காக குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்றார் என்பது உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துவிட்டனர்.

பிறந்த பச்சிளம் குழந்தையை பையில் வைத்து வீசிய தாய் யார்? குழப்பத்தில் சுவிஸ் பொலிசார்

மூலக்கதை