நண்பரின் இரங்கல் நிகழ்வுக்கு சென்று பலியான நபர்: கனடாவில் ஒரு துயர சம்பவம் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
நண்பரின் இரங்கல் நிகழ்வுக்கு சென்று பலியான நபர்: கனடாவில் ஒரு துயர சம்பவம் (வீடியோ இணைப்பு)

ரொறொன்ரோ நகரை சேர்ந்த Julian Weekes(27) மற்றும் Ceyon Carrington ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

கடந்த மாதம் பொது இடத்தில் நிகழ்ந்த ஒரு பயங்கர துப்பாக்கி சூட்டில் Ceyon Carrington பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது இரங்கல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த இரங்கல் நிகழ்வில் பங்கேற்க Julian Weekes சென்றுள்ளார்.

Parliament Street பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஜுலியன் வீக்ஸை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து மைக் பேட்டர்ஸன் என்ற பொலிஸ் அதிகாரி பேசியபோது, ‘துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது ஒரு சந்தேகத்திற்குரிய நபர் வெளியே அவசரமாக ஓடியுள்ளார்.

ஆனால், அவரை பொலிசார் பிடிப்பதற்குள் தப்பியுள்ளார். நண்பரின் கொலைக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பது தற்போது உறுதி செய்யப்படவில்லை.

தாக்குதல் நடந்த பகுதியில் ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். மேலும், இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை சந்திக்குமாறு மைக் பேட்டர்ஸன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை