தொடரும் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்: ஒரே நாளில் 9 பேர் பலி

NEWSONEWS  NEWSONEWS
தொடரும் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்: ஒரே நாளில் 9 பேர் பலி

வார இறுதி நாளான நேற்று ஜேர்மனியில் உள்ள 6 மாகாணங்களில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பெரும் விபத்துக்களை சந்தித்துள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக பொலிசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

‘அதில், ‘Bavaria, North Rhine-Westphalia மற்றும் Lower Saxony ஆகிய 3 மாகாணங்கள் 6 பேரும், Brandenburg, Rhineland-Palatinate மற்றும் Saxony ஆகிய 3 மாகாணங்கள் 3 இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்களுக்கான காரணம் இன்னும் உறுதியாக பொலிசாருக்கு தெரியவரவில்லை. எனினும், இந்த விபத்துக்கு வானிலை மாற்றமும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த வாரம் இருந்த மிதமான காலநிலைய இந்த வாரத்திலும் இதே அளவில் தொடரும் என ஜேர்மன் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த வாரத்திலிருந்து வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மிதமான அல்லது கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மூலக்கதை