மாணவனை தீவிரவாதி என்ற ஆசிரியரை விடுமுறைக்கு அனுப்பிய நிர்வாகம்!

NEWSONEWS  NEWSONEWS
மாணவனை தீவிரவாதி என்ற ஆசிரியரை விடுமுறைக்கு அனுப்பிய நிர்வாகம்!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சக மாணவர்களுடன் சத்தமாக சிரித்த மாணவனை ஆசிரியர் ஒருவர் தீவிரவாதி என அழைத்து அவமதித்துள்ளார்.

12 வயதான வலீத் அபுஷாபன், வகுப்பறையில் கிட்டிய ஓய்வு நேரத்தில் தமது நண்பர்கள் சிலருடன் Bend It Like Beckham என்ற திரைப்படத்தை பார்த்துள்ளான்.

அப்போது படத்தில் வந்த கொமடி காட்சிகளுக்காய் வலீத் சத்தமாக சிரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், வலீத் தீவிரவாதி என்பதால் தான் சத்தமாக சிரிப்பதாக கூறி அந்த 12 வயது சிறுவனை அவமதித்துள்ளார்.

இச்சம்பவம் வலீதின் குடும்பத்தினரால் பாடசாலை நிர்வாகத்தினரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளதை அடுத்து அந்த ஆசிரியரை விடுமுறைக்கு அனுப்பியுள்ளனர்.

மத ரீதியான கருத்துக்களை கையாள போதிய பயிற்சியை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே, தமது மகனை ஒரு அமெரிக்கர் போலவே வளர்த்து வருவதாகவும், இஸ்லாமியர் என்பதால் மட்டுமே அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது எனவும் அந்த சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்தம்பர் மாதம் அஹ்மத் முஹமத் என்ற 14 வயது மாணவன் தயாரித்த கடிகாரம், ஆசிரியரால் வெடிகுண்டு என கூறப்பட்டதால் மாணவன் கைதான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை