கார் மீது பயங்கரமாக மோதிய விமானம்: உடல் நசுங்கி பலியான பெண் (வீடியோ இணைப்பு)
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள San Diego நகர் நெடுஞ்சாலையில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை 9.15 மணியளவில் நெடுஞ்சாலை ஓரமாக கார் ஒன்று நின்றுள்ளது. இதில் 38 வயதான பெண் உள்பட 4 பேர் அமர்ந்திருந்துள்ளனர்.
அப்போது சிறிய ரக விமானம் ஒன்று வேகமாக தாழ்வான உயரத்தில் பறந்து வந்துள்ளது.
விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் சாலையில் தரையிறங்கி அசுர வேகத்தில் பாய்ந்து காரின் பின்புறத்தில் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த 38 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காரில் இருந்த மற்ற 3 நபர்கள் மிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், 60 வயதான விமானியின் தலையில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளதால், ஆபத்தான நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தினை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறுகையில், ‘விமானம் தாழ்வாக பறந்து வந்தபோது, அதன் சக்கரங்கள் சரியாக வெளியே வராததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.
எனினும், கார் மீது சிறிய ரக விமானம் எப்படி மோதியது என்பது உள்ளிட்ட தகவல்கள் உறுதியாக தெரியாததால், இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
