அப்பாவிகள் போல் நாடகமாடிய கொள்ளையர்கள்: உதவிக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட விபரீதம்

COOL SWISS  COOL SWISS
அப்பாவிகள் போல் நாடகமாடிய கொள்ளையர்கள்: உதவிக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட விபரீதம்

சுவிஸின் Schwyzer மாகாணத்தில் உள்ள Einsiedeln என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் 39 வயதான நபர் ஒருவர் காரில் பயணித்துள்ளார்.

அப்போது சாலையின் ஓரத்தில் கார் ஒன்று பழுதாகியதாக கூறி இருவர் உதவிக்காக நபர்களை எதிர்ப்பார்த்து நின்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த சாலை வழியாக வந்த நபரிடம் அவர்கள் இருவரும் உதவி கேட்டுள்ளனர்.

நள்ளிரவு நேரம் என்பதால், அவர்களுக்கு உதவ நினைத்த நபர் தனது காரை விட்டு இறங்கி அவர்களின் கார் அருகே சென்றுள்ளார்.

அப்போது, காருக்கு அருகே இருந்த ஒருவர் திடீரென அவர் மீது பாய்ந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இருவரும் வழிப்பறி கொள்ளையர்கள் என்றும், கார் பழுதாகியுள்ளதாக நாடகமாடியுள்ளது அவருக்கு அப்போது தான் புரிந்துள்ளது.

எனினும், இருவரையும் எதிர்க்கொள்ள முடியாததால் தன்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான பிராங்குகளை கொள்ளையர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

பணத்தை பெற்ற இருவரும் பழுதாகியதாக கூறப்பட்ட காரில் ஏறி தப்பியுள்ளனர்.

இந்த வழிப்பறி சம்பவமாக பாதிக்கப்பட்ட அந்த நபர் பொலிசாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து கொள்ளையர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மூலக்கதை