இருவரை கொன்றுவிட்டு பேஸ்புக்கில் பெருமையாக பேசிய இளம்பெண்: நடந்தது என்ன?

NEWSONEWS  NEWSONEWS
இருவரை கொன்றுவிட்டு பேஸ்புக்கில் பெருமையாக பேசிய இளம்பெண்: நடந்தது என்ன?

கலிபோர்னியா மாகாணத்தில் Brianna Longoria என்ற 18 வயது இளம்பெண் வசித்து வருகிறார்.

இவரும் இவருடைய இரண்டு தோழிகளும் சில தினங்களுக்கு முன்னர் காரில் வெளியே புறப்பட்டுள்ளனர்.

லேன்கஸ்டர் என்ற பகுதிக்கு கார் வந்தபோது, அங்கிருந்த சிக்னலை மீறி காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த டொயோட்டோ கார் மீது பலமாக மோதியதில் இரு கார்களும் பலத்த சேதமடைந்தன.

டொயோட்டோ காரில் பயணம் செய்த இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

ஆனால், கார் ஓட்டிய இளம்பெண் மற்றும் அவரது இரு தோழிகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மூவரையும் மீட்ட பொலிசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பொலிசார் சோதனை செய்தபோது மூவரும் போதை மருந்து அருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த விபத்திற்கு பிறகு, இளம்பெண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இன்று நடந்த கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆனால், இன்றைய செய்திகளில் நான் எல்லா இடத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறேன்’ என பெருமையாக பதிவு வெளியிட்டுள்ளார்.

எனினும், இதுவரை இளம்பெண் மீது பொலிசார் எவ்வித குற்ற வழக்குகளும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை