பிறந்த பச்சிளம் குழந்தையை பையில் வைத்து வீசிய தாய் யார்? குழப்பத்தில் சுவிஸ் பொலிசார்

COOL SWISS  COOL SWISS
பிறந்த பச்சிளம் குழந்தையை பையில் வைத்து வீசிய தாய் யார்? குழப்பத்தில் சுவிஸ் பொலிசார்

சுவிஸின் லூசெர்ன் நகரில் அரசு குழந்தைகள் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிலர் இரவுப் பணியில் இருந்துள்ளனர்.

அப்போது, மருத்துவமனை வாசலில் ஒரு கைப்பை ஒன்று இருப்பதை கண்டு ஒரு ஊழியர் அதனை திறந்து பார்த்தப்போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பைக்கு உள்ளே பச்சிளம் குழந்தை ஒன்று ஒரு சிறிய துணியால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குள் கொண்டு சென்று மருத்துவர்களிடம் காட்டியுள்ளார்.

குழந்தையை பரிசோதனை செய்தபோது, அது மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளது.

உடனடியாக குழந்தைக்கு தேவையான அவசர மருத்துவ உதவிகளை அங்குள்ள மருத்துவர்கள் அளித்துவிட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதே மருத்துவமனையில் இந்த குழந்தை பிறந்ததா? அல்லது பெண் குழந்தை என்பதற்காக அதை மருத்துவமனையில் கொண்டு வந்து வீசி விட்டு சென்றுள்ளனரா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள பொலிசார் அந்த குழந்தையின் பெற்றோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மூலக்கதை