பெற்ற மகனையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை: அதிர்ச்சியளிக்கும் பின்னணி

NEWSONEWS  NEWSONEWS
பெற்ற மகனையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை: அதிர்ச்சியளிக்கும் பின்னணி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஷிகதா கலில் ஈஸா. இவர் தனது மனைவி மற்றும் மகன் அமீருடன் வசித்து வருகிறார்.

இதில், அமீருக்கு ஒரின உறவில் நாட்டமுள்ளவர் என்ற விவரம் அவரது பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அமீரை அவர்கள் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக தனது வருத்தங்கள் அடங்கிய பதிவையும் அமீர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாயன்று அவர்களது வீட்டில் துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக அண்டை வீட்டினர் அளித்த தகவலையடுத்து பொலிசார் அங்கு வந்துள்ளனர்.

பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அமீர் துப்பாக்கியால் சுடப்பட்டும் அவரது தாயார் கத்தியால் குத்தப்பட்டும் மரணமடைந்து கிடந்தனர்

இதையடுத்து கையில் துப்பாக்கியுடன் இருந்த கலில் ஈஸாவை பொலிசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் ஈஸா முன்னரே தனது மகனை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். எனவே இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனையடுத்து ஈஸாவை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி இது தொடர்பான விசாரணையை ஏப்ரல் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் அமீரின் தாயார் மரணத்துக்கு யார் காரணம் என்று தெரியவில்லை என்றும் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தனது தாயாரை அமீர் கத்தியால் குத்தி செய்துள்ளார் .பின்னர் தனது தந்தையை கொலைசெய்ய முயன்றபோது கலில் ஈஸா துப்பாக்கியால் அமீரை சுட்டுள்ளார் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை