சுவிஸ் மருந்து நிறுவனம் மீது துருக்கிய அரசு வழக்கறிஞர்கள் ஊழல் விசாரணை

COOL SWISS  COOL SWISS
சுவிஸ் மருந்து நிறுவனம் மீது துருக்கிய அரசு வழக்கறிஞர்கள் ஊழல் விசாரணை

துருக்கி சந்தையில் நியாமற்ற முறையில் பங்குகளை பெற சுவிஸ் மருந்த நிறுவனம் நோவார்டிஸ் 85 மில்லியன் அமெரிக்க டொலகர்ளை, ஒரு ஆலோசனை நிறுவனம் மூலம் துருக்கி சுகாதார அமைச்சத்தை சேர்ந்த பிரதிநிகளுக்கு அளித்துள்ளனர்.

இது தொடர்பான அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை துருக்கிய அரசு வழக்கறிஞர்கள் தற்போது தொடங்கியுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக செய்தி நிறுவங்கள் சில நோவார்டிஸ் மருந்து நிறுவனத்தை அணுகி விசாரித்த போது, இந்த ஊழல் குற்றச்சாட்டை பற்றி கருத்து கூற மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நோவார்டிஸ் மருந்து நிறுவனம் மீது ஏற்கனவே இதுபோல் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை