உலகத்தை பற்றி எதுவுமே தெரியலை: டிரம்ப் குறித்து ஒபாமா வேதனை

NEWSONEWS  NEWSONEWS
உலகத்தை பற்றி எதுவுமே தெரியலை: டிரம்ப் குறித்து ஒபாமா வேதனை

வெளிநாட்டு கொள்கைகள் குறித்து டொனால்டு டிரம்புக்கு எதுவுமே தெரியவில்லை என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட விரும்பும் டொனால்டு டிரம்ப் வெளியுறவு கொள்கைகள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒபாமா, அறிக்கைகளாக விட்டுக் கொண்டிருக்கும் அந்த நபருக்கு (டிரம்ப்) அயல்நாட்டுக் கொள்கை அல்லது அணுக்கொள்கை, அல்லது கொரியா, அல்லது உலகத்தைப் பற்றியே கூட எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.

அமெரிக்க தேர்தலை உலக நாடுகள் கவனித்து வருகின்றன, நாம் என்ன செய்கிறோம் என்பது பிற நாடுகளுக்கு மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது.

அமெரிக்க அதிபருக்கு உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும் என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்.

எனவே வெளிநாட்டு கொள்கைகள் உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளமை போன்றவற்றையும் பாதுகாக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பாக ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகள் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் செய்த தியாகங்களின் மீது கட்டமைக்கப்பட்டது.

எனவே இத்தகைய முக்கியத்துவங்களை அறியாத ஒருவர் அதிபர் பதவிக்கு விரும்பத் தகாதவர் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை