சுவிஸில் துப்பாக்கி பயன்பாடு அதிகரிப்பு: ஓர் அதிர்ச்சி ரிப்போட்

COOL SWISS  COOL SWISS
சுவிஸில் துப்பாக்கி பயன்பாடு அதிகரிப்பு: ஓர் அதிர்ச்சி ரிப்போட்

உலகில் குடிமக்கள் துப்பாக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ள நாடுகளில் சுவிசும் முன்னிலையில் இருக்கிறது. இருப்பினும் இது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது.

பாதுகாப்பு அமைச்சின் தகவல் படி, 8.3 மில்லியன் மக்களிடம் கிட்டதட்ட 2 மில்லியன் துப்பாக்கிகள் புழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வில் சுமார் 36,000 குடியிருப்பாளர்களை கொண்ட Obwalden மண்டலத்தில் துப்பாக்கி பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்ட அனைவருக்கும் கிட்டத்தட்ட பொலிசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

விதவிதமான துப்பாக்கி பயன்படுத்தும் ஆர்வம் துப்பாக்கி உரிமை விகிதங்களை உயர்த்தி இருக்கலாம் என்று Obwalden மண்டல பொலிசார் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கி உரிமை விகிதங்கள் அதிகரிப்பு வேறுவிதமான சமூகசீர்திருத்த கேடுகளை விளைவிக்க கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

மூலக்கதை