பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளி: நாடு கடத்துகிறது பெல்ஜியம்

NEWSONEWS  NEWSONEWS
பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளி: நாடு கடத்துகிறது பெல்ஜியம்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன.

130 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களில் முக்கிய குற்றவாளி, சலா அப்தே சிலாம் (26) என்பவன், பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது, கடந்த மாதம் 18 ஆம் திகதி பொலிசார் சுட்டு பிடித்தனர்.

அவனை கைது செய்த 4 நாட்களில்தான் பிரசல்ஸ் நகரில் விமான நிலையத்திலும், மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்திலும் தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தினார்கள். இதில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பிரசல்ஸ் தாக்குதலுக்கு இத்தீவிரவாதிக்கும் தொடர்பு இருக்கிறது என பொலிசார் சந்தேகப்பட்டு வந்த நிலையில், இத்தீவிரவாதியின் வழக்கறிஞர், எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறினார்.

இந்நிலையில் பாரீஸ் தாக்குதல் சம்பவம் குறித்து சலா அப்தே சிலாம், மவுனம் காத்து வந்தான். மேலும் பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல்கள் வெளிவந்தன.

இதற்கிடையில், இந்த விசாரணைக்கு அவன் சம்மதம் தெரிவித்து விட்டதாக அவனது வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், சலே அப்தே சிலாம், 10 நாட்களுக்குள் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டு விடுவான் என்று பெல்ஜியம் நீதித்துறை மந்திரி ஜீன் ஜாக்குஸ் உர்வாஸ் தெரிவித்துள்ளர்.

பிரான்ஸ் பொலிசார் இவரிடம், பாரீஸ் தாக்குதல் மற்றும் பின்னணி குறித்து விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை