கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் உயிரற்று கிடந்த பச்சிளம் குழந்தை: கல்லூரி மாணவி கைது

NEWSONEWS  NEWSONEWS
கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் உயிரற்று கிடந்த பச்சிளம் குழந்தை: கல்லூரி மாணவி கைது

நியூயோர்க் நகரை சேர்ந்த இம்மாணவி கல்லூரியில் படித்துவந்துள்ளார், இந்நிலையில் தவறான முறையால் கருவுற்ற இவர், அதனை தனது பெற்றோரிடம் மறைத்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இவருக்கு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் குழந்தை மூச்சுத்திணறி இறந்துவிட்டதால் அதனை ஒரு கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் போட்டு தனது வீட்டில் அகற்றியுள்ளார்.

ஆனால், இவருக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருக்கவே, இதனை அறியாத பெற்றோர் இவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர், அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார் எனத்தெரிவித்துள்ளார்.

பின்னர் இம்மாணவியிடம் குழந்தை குறித்து விசாரணை நடத்தியதில் மேற்கூறிய தகவல்கள் தெரியவந்துள்ளது, இதனைத்தொடர்ந்து இக்குற்றத்திற்காக பொலிசார் இவரை கைது செய்துள்ளனர்.

மேலும், பிளாஸ்டிக் பையில் உயிரற்கு கிடந்த குழந்தையின் உடலை பொலிசார் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மூலக்கதை