"எனது தலைப்பாகை தான் காரணம்": கனடாவில் சீக்கியரை தாக்கிய கும்பல்! (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
எனது தலைப்பாகை தான் காரணம்: கனடாவில் சீக்கியரை தாக்கிய கும்பல்! (வீடியோ இணைப்பு)

கனடாவின் Quebec மாகாணத்தை சேர்ந்த Supninder Singh Khehra என்பவர் நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புவதற்காக வாகனத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, கார் ஒன்றில் வந்த கும்பல், இவரை அணுகி பிரெஞ்சு மொழியில் கத்தியுள்ளனர், மேலும் இவரை முறைத்து பார்த்ததுடன், அவர்கள் குறிப்பாக இவரின் தலையில் இருந்த தலைப்பாகையை குறிவைத்துள்ளனர்.

முதலில் இவரது கன்னத்தில் குத்துவிட்ட அவர்கள், அதன் பின்னர் அவர் தலையில் உள்ள தலைப்பாகை கீழே விழ வேண்டும் என்பதற்காக மீண்டும் தாக்கியதில் அவரது தலைப்பாகை சற்று சரிந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் வருகையை பார்த்த அக்கும்பல், இவரை தூக்கி வீசிவிட்டு காரில் தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து சீக்கிய நபர் கூறுகையில், இந்த சம்பவம் நடந்ததற்கு மூலக்காரணம் என்னவென்றால் எனது இனம், எனது நிறம் மற்றும் எனது தலைப்பாகை.

இந்த சம்பவம் குறித்து நான் மிகவும் வருத்தமடைகிறேன், ஏனெனில் எங்கள் இனத்தில் உள்ள சிறு குழந்தைகளின் பாதுகாப்பு என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார், இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது, இது வெறுக்கத்தக்க செயல் மட்டுமல்லாது இது போன்ற சம்பவங்களுக்கு கனடாவில் இடம் கிடையாது.

இது பாகுபாடு மற்றும் இன வெறுப்பினை வகையை பிரதிபலிக்கிறது, எனவே நாங்கள் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனக்கூறியுள்ளார்.

தப்பியோடிய குற்றவாளிகளில் 2 பேரை கைது செய்துள்ளோம் என பொலிசார் செய்துள்ளனர்.

மூலக்கதை