பனாமா பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றது எப்படி? அமிதாப் பச்சன் விளக்கம்
பனாமா நாட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற்றிருப்பது தொடர்பாக அமிதாப் பச்சன் விளக்கமளித்துள்ளார்.
அமிதாப் பச்சன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் என்னைப்பற்றி சில நாளிதழ்களில் உண்மைக்கு புறம்பான வகையில் கட்டுரைகளும், செய்திகளும் வெளியாகி வருகின்றன.
பனாமா பேப்பர்ஸ் என்ற கள்ளத்தனமான பணப்பரிவர்த்தனை தொடர்பாக வெளிவரும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நிறுவனங்களிலும் நான் எந்தக் காலத்திலும் இயக்குநராக இருந்தது கிடையாது.
பனாமா நாட்டில் இந்திய பிரபலங்கள் குவித்து வைத்திருப்பதாக கூறப்படும் கருப்புப் பணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
இந்த பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருப்பது எப்படி? என்பதை இந்த விசாரணையின் மூலம் அறிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.
என்மீதான இந்த குற்றச்சாட்டுகள் வெளியானதில் இருந்து மராட்டிய மாநிலத்தின் புலிகள் பாதுகாப்பு பிரச்சார தூதர் பதவியில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது, மராட்டிய மாநில அரசின் காழ்ப்புணர்வு நடவடிக்கை. இதைநான் தாழ்மையான மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
யார் எந்த முடிவை எடுத்தாலும், சமூக நலனுடன் தொடர்புடைய புலிகள் பாதுகாப்பு பிரச்சாரம், போலியோ ஒழிப்பு, தூய்மை இந்தியா திட்டம், காசநோய் ஒழிப்பு, ஹெபிடைட்டிஸ்-பி, நீரிழிவு விழிப்புணர்வு பிரசாரம், குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சாரங்களிலும் என்னுடைய தனிமனித உழைப்பு என்றென்றும் இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்பிகிறேன் என கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
