நள்ளிரவில் உதவிக் கேட்டு வந்த மர்ம நபர்கள்: அப்பாவி நபருக்கு நேர்ந்த விபரீதம்

COOL SWISS  COOL SWISS
நள்ளிரவில் உதவிக் கேட்டு வந்த மர்ம நபர்கள்: அப்பாவி நபருக்கு நேர்ந்த விபரீதம்

பேசல் மாகாணத்தில் உள்ள Claramatte என்ற பகுதியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் 41 வயதான நபர் ஒருவர் அலுவலகப் பணி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

சாலையில் நடந்துச் சென்ற அவரை 3 மர்ம நபர்கள் நீண்ட தூரம் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு, அவரை நெருங்கிய மூவரில் ஒருவன் சிகரெட் வேண்டும் என கேட்டுள்ளான்.

நடக்கப்போகும் விபரீதத்தை அறியாத அந்த நபரும் சிகரெட் எடுத்துக் கொடுத்துள்ளார்.

அப்போது, நபருக்கு பின்னால் நின்றுருந்த மற்றொருவன் நபரை திடீரென தலையில் ஒரு ஆயுதத்தை கொண்டு தாக்கியுள்ளான்.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர் சுயநினைவின்றி மயங்கி கீழே சுருண்டு விழுந்துள்ளார்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம கும்பல் அவரிடம் இருந்த பணம் மற்றும் விலைமதிப்பற்ற கைப்பேசியை கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

சிறிது நேரத்திற்கு பின்னர், பாதசாரிகளின் உதவியால் வீடு திரும்பிய அந்த நபர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் மற்றும் மர்ம கும்பலின் அடையாளங்களை சேகரித்துக்கொண்ட பொலிசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

மூலக்கதை