இந்த ஆண்டு இதுதான் முக்கிய அம்சங்கள்!
மும்பையில் கோலாகலமாக துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரின் 9-வது சீசனில் முக்கிய அம்சங்கள் என்ன என்பது குறித்து ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் ஷுக்லா அறிவித்துள்ளார்.
அமெரிக்க பாப் பாடகரின் இசை நிகழ்ச்சி, மேஜர் லேசர் குழுவினரின் நடனம் என களைகட்டவுள்ள விழாவினை மேலும் வண்ணமயமாக்க டுவய்ன் பிராவோ தனது சாம்பியன் பாடலுக்கு நடனம் ஆடவுள்ளார்.
பிராவோ உடன் இணைந்து சில மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களும் நடனத்தில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஐ.பி.எல் தொடரில் முதன் முறையாக எல்ஈடி. ஸ்டம்ப் பயன்படுத்தப்படும் எனவும் ஷுக்லா தெரிவித்துள்ளார்.
இந்த ஐ.பி.எல். தொடரில் ரசிகர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைப்பு குழுவினர் புது திட்டமொன்றை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி சிக்கலான தீர்ப்புகளுக்கு முன்னர் நடுவருக்கு ரசிகர்கள் தங்களது கருத்துகளை கூற 30 வினாடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு ரசிகர்களுக்கான மேடையின் எண்ணிக்கையை 36 ஆக அதிகரித்துள்ளதாகவும், அதில் ஒரு மேடை அமெரிக்காவில் நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத்தின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் சாம்பியன் பாடலுக்கு நடனம் ஆடியதால் அந்த பாடல் பிரபலமானது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
