175 தொழிலாளிகளை கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்: சிரியா ராணுவம் அதிர்ச்சி தகவல்

NEWSONEWS  NEWSONEWS
175 தொழிலாளிகளை கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்: சிரியா ராணுவம் அதிர்ச்சி தகவல்

சிரியாவின் தலைநகரமான டமாகஸில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் Badiyah என்ற சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுமார் 300 தொழிலாளிகளை சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர்.

இந்நிலையில், சிரியா ராணுவம் மூலம் பெறப்பட்ட தகவல்களை சிரியா செய்தி ஏஜென்சியான சானா ஒரு அதிர்ச்சி தகவல்களை நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், கடத்தப்பட்ட 300 தொழிலாளிகளில் 175 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளதாக பரபரப்பு செய்தினை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை சிரியா தொழிற்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிற்சாலையின் நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், திங்கள் கிழமை முதல் கடத்தப்பட்ட தொழிலாளிகளை தொடர்புக்கொள்ள முடியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை