டோனி ஸ்டைலில் நிருபரை கலாய்த்த ரெய்னா

LANKASRI SPORTS  LANKASRI SPORTS

சமீபத்தில் குஜராத் லயன்ஸ் ஐபிஎல் அணி சார்பாக அதன் அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது பல கேள்விகளை முன் வைத்த நிருபர்கள், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் வெளிநாட்டவருக்கா இல்லை இந்தியருக்கா முன்னுரிமை என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, கேள்வி எழுப்பிய நிருபரை பார்த்து, நீங்கள் உங்கள் சொந்த மனைவியுடன் இயல்பாக இருப்பீர்களா இல்லை வேறொருவருடனா என பதிலளித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னாவில் இந்த பதிலால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது, சாதாரணமாக நிருபர்களின் கேள்விகளுக்கு கவனமுடன் பதில் அளிக்கும் ரெய்னா, கொமடியாக பதில் அளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் டோனியிடம் ஓய்வு பெறுவது குறித்து கேள்வி எழுப்பிய நிருபருக்கு அவர் நக்கலுடன் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை