வரைகோலால் சிறுமியின் முகத்தை பதம் பார்த்த ஆசிரியை: பணி நீக்கம் செய்யுமா நிர்வாகம்?

NEWSONEWS  NEWSONEWS
வரைகோலால் சிறுமியின் முகத்தை பதம் பார்த்த ஆசிரியை: பணி நீக்கம் செய்யுமா நிர்வாகம்?

வியட்நாமின் Bat Xat மாவட்டத்தில் உள்ள Phin Ngan Elementary பாடசாலையில் படித்து வந்த 6 வயது சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வீட்டுப்பாடத்தில் எழுத்துப்பிழை விட்டுள்ளார்.

இதனால் கோபம் கொண்ட ஆசிரியை Tran Thi Thu Tra, வரைகோலினை வைத்து சிறுமியின் முகத்தில் அடித்துள்ளார்.

இதனால் சிறுமியின் கண்ணின் கீழ்பகுதியில் ரத்தம் கட்டி, வீங்கியுள்ளது, மிகுந்த வலியால் அவதியுற்ற சிறுமியை அவரது இரண்டு தோழிகள் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துசென்றுள்ளனர்.

மகளின் நிலமையை பார்த்து அதிர்ச்சியடைந்த தாயார், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளித்துள்ளார், மேலும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததையடுத்து, பாடசாலைகளில் இதுபோன்ற வன்முறை சம்பவங்களுக்கு இடம் கிடையாது எனக்கூறிய நிர்வாகம், ஆசிரியையை தற்காலிக நீக்கம் செய்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைக்கு பின்னர், ஆசிரியையை பணி நீக்கம் செய்தாலும் செய்வோம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை