கார் ஏறி பரிதாபமாக உயிரை விட்ட 19 மாத குழந்தை: பெற்றோரின் அலட்சியம் காரணமா?

COOL SWISS  COOL SWISS
கார் ஏறி பரிதாபமாக உயிரை விட்ட 19 மாத குழந்தை: பெற்றோரின் அலட்சியம் காரணமா?

சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில் Zermatt என்ற ஒரு சிறிய கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பிரித்தானியா நாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. இந்த குடும்பத்தில் 19 மாதம் ஆன ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், பெற்றோர் ஒரு டாக்ஸிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

சரியாக 11 மணியளவில் டாக்ஸி அவர்களது வீட்டு வாசலில் வந்து நின்றுள்ளது. அனைவரும் காரில் ஏறிவதற்காக கார் சில அடிகள் தூரம் பின்னோக்கி சென்றுள்ளது.

அப்போது, காரின் பின்புறத்தில் அந்த 19 மாத குழந்தை இருந்துள்ளதை ஓட்டுனர் கவனிக்க தவறியுள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் பின்னோக்கி வந்த காரின் சக்கரங்கள் அந்த குழந்தையின் மீது ஏறி இறங்கியுள்ளது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிய பெற்றோர் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக அவசரஊர்திக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால்,அவரசஊர்தி வருவதற்கு முன்னதாக விபத்து ஏற்படுத்திய டாக்ஸியில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது.

குழந்தை எப்படி காரின் பின்புறத்திற்கு வந்தது என்பது இன்னும் தெரியவரவில்லை. குழந்தையை அலட்சியமாக விட்டதால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை