மகனை ஆத்மார்த்தமாக காதலித்த தாய்: திருமணத்திற்கு தயார்! (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
மகனை ஆத்மார்த்தமாக காதலித்த தாய்: திருமணத்திற்கு தயார்! (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவை சேர்ந்த Kim West (51) என்ற பெண்மணி 30 வருடங்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த Ben Ford என்ற மகனை சிறுவயதிலேயே வேறு ஒருவருக்கு தத்து கொடுத்துள்ளார்.

தற்போது 32 வயதை எட்டியுள்ள Ben Ford விக்டோரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் Kim தனது மகனை சந்தித்தவுடன், அவன் மீது ஒரு இனம்புரியாத அன்பு வந்துள்ளது.

இதே அன்பு, Ben க்கும் வந்துவிடவே இருவரும் நெருங்கிப்பழக ஆரம்பித்துள்ளனர், தன் மனைவியிடம் தோன்றாக ஒருவித உணர்வு தனது தாயாரிடம் Ben க்கு தோன்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து Ben தனது மனைவியிடம், எனது தாயாருக்காக நான் உன்னை விட்டு செல்கிறேன் என்று கூறி Michigan மாநிலத்திற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், ஒருவரையொருவர் ஆத்மார்த்தமாக காதலிக்கும் இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டு குழந்தைபெற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர்.

இதுகுறித்து Kim தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த விடயத்தை கேள்விப்படும் அனைவரும் இதனை, அருவருப்பாகவும், வியக்கத்தக்க சம்பவமாக பார்ப்பார்கள்.

ஆனால், இது முறையற்ற உறவு கிடையாது, மரபணு சார்ந்த இனக்கவர்ச்சி எனக்கூறியுள்ளார்.

உணர்ச்சிகளை நம்மால் கட்டுப்படுத்த இயலும், ஆனால் ஒருவர் மீது கொண்டிருக்கும் அன்பை உங்களுக்குள் நீங்கள் கட்டுப்படுத்திக்கொண்டால், வாழ்க்கை முழுவதும் ஏதேனும் ஒரு விடயத்திற்காக நீங்கள் போராடிக்கொண்டிருக்க வேண்டும்.

வாழ்க்கையில் கிடைக்கும் இதுபோன்ற ஒருவித வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், எனவே Ben- ஐ பிரிந்து ஒருபோதும் செல்லமாட்டேன் எனக்கூறியுள்ளார்.

மூலக்கதை