உண்மையை ஒப்புக்கொண்ட பிரித்தானிய பிரதமர்! (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
உண்மையை ஒப்புக்கொண்ட பிரித்தானிய பிரதமர்! (வீடியோ இணைப்பு)

தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் ஒப்புக்கொண்டுள்ளார்.

'பனாமா லீக்ஸ்' என்றழைக்கப்படும் ரகசிய ஆவண தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 12 நாடுகளின் இந்நாள், முன்னாள் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூனின் தந்தை இயன் கமெரூனும் ஒருவர்.

கடந்த 2010ஆம் ஆண்டு இயன் இருந்த பிறகு வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் மூலம் டேவிட் கமெரூனும் பலன் அடைந்துவந்ததாக கூறப்பட்டது.

எனினும் இந்த தகவலை டேவிட் கமெரூன் மறுத்தார். இந்நிலையில் தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டேவிட் கமெரூன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, கடந்த காலங்களில் என்னிடம் பங்குகள் இருந்தன. எனது தந்தை ஒரு பங்கு தரகர் என்பதால் இது இயல்பான ஒன்றுதான்.

எனினும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதால் கடந்த 2010ஆம் ஆண்டே அவற்றை விற்றுவிட்டேன். எனக்கும் எனது மனைவி சமந்தாவுக்கு 5000 யூனிட்கள் வரை பங்குகள் இருந்தன.

அதன் மதிப்பு 30 ஆயிரம் பவுண்டாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த ஒப்புதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து கமெரூன் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கூறி வருகின்றனர்.

வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு இருந்தது உண்மைதான் தான் பிரதமரே ஒப்புக்கொண்ட சம்பவம் பெரும் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை