பல்வேறு கலை,கலாசார நிகழ்வுகளுடன் பிரம்மாண்டமான அளவில் நடைபெறவிருக்கும் "இலண்டன் தமிழர் சந்தை 2016
கடந்த வருடம்போலவே இம்முறையும் பிரித்தானிய வர்த்தக சம்மேளனமானது 'நாச்சியார்' நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகின்றது.
காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வு மாலை 8 மணி வரை நடைபெறும். சுமார் 150 வரையிலான வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்த இருக்கின்றன. அத்துடன் ஆடல், பாடல், வேடிக்கை நிகழ்வுகள், வினோத நிகழ்வுகள், ஆடை-அலங்கார காட்சிகள் என்று பல்வேறுவிதமான களியாட்ட நிகழ்வுகளும் இந்த நிகழ்வில் நடைபெற இருக்கின்றன.
இந்த நிகழ்வுகளில் ஐரோப்பா மற்றும் நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் வந்து சிறப்பிக்க இருக்கிறார்கள். பல்வேறு விலை கழிவுடன் கூடிய விற்பனைகளும் இந்த நிகழ்வில் இடம்பெறும். நுழைவு கட்டணமாக £3 மட்டுமே அறவிடப்படும்.
கடந்த வருடம் சுமார் 6000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல இடங்களில் இருந்தும் வந்து இந்த நிகழ்வுகளை பார்வையிட்டிருந்தார்கள். இந்த நிலையில் இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரித்தானிய பாராளுமன்றத்தின் சபை முதல்வர் கிறிஸ் க்ரைலிங் கலந்துகொள்ள இருப்பதுடன் நிழல் நிதி அமைச்சர் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
"இலண்டன் தமிழர் சந்தை 2016" நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள் பற்றி விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் மாநாடு அண்மையில் நடைபெற்றபோது விளக்கம் அளித்த பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எம். திருவாசகம், நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் சில கண்காட்சி கூடங்கள் மட்டுமே இன்னமும் எஞ்சி இருப்பதால் முதலில் தொடர்புகொண்டு விருப்பம் தெரிவிக்கும் வர்த்தக முயற்சியாளர்களுக்கே அவை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து பாடல் கலைஞர்களுடன் யாழ்ப்பான வர்த்தக சம்மேளன தலைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
