சுவிஸில் பயங்கரம்: தண்டவாளத்தில் நின்ற பெண் மீது விரைவு ரயில் மோதி பலி

COOL SWISS  COOL SWISS
சுவிஸில் பயங்கரம்: தண்டவாளத்தில் நின்ற பெண் மீது விரைவு ரயில் மோதி பலி

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் இருந்து விரைவு ரயில் ஒன்று நேற்று காலை 10.30 மணியளவில் புறப்பட்டுள்ளது.

பேர்ன் மாகாணத்தில் உள்ள Ligerz என்ற பகுதிக்கு ரயில் வந்தபோது, தூரத்தில் தண்டவாளத்திற்கு நடுவே ஒருவர் நிற்பதை ரயில் ஓட்டுனர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக வேகத்தை குறைக்கும் கருவியை இயக்கியுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக பாய்ந்து வந்த ரயில் பெண் மீது மோதி ஏறிச்சென்றுள்ளது.

இந்த விபத்தில் பெண் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் விசாரணையை முடக்கியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரியான Christoph Gnagi என்பவர் நடத்திய விசாரணையில், ‘பெண்ணின் உடல் அடையாளம் தெரியாதவாறு நசுங்கியுள்ளதால், அவர் யார்? என்ன வயது? என்பது உள்ளிட்ட தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும், முதற்கட்ட விசாரணையில் ’பெண் தண்டவாளத்தை கடப்பதற்காக நின்றபோது இந்த மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்றும், இது விபத்தாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், தற்கொலை செய்துகொண்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை